தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தேர்தல்களில் கணிசமாக பதிவாகும் 'நோட்டா'

 தேர்தல்களில் கணிசமாக பதிவாகும் 'நோட்டா'

 தேர்தல்களில் கணிசமாக பதிவாகும் 'நோட்டா'


ADDED : ஏப் 05, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், ஒவ்வொரு தேர்தலிலும், ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டளித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணிகள் செய்யும் நிலையில், வேட்பாளர்கள் ஒருபுறம் ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், வாக்காளர்கள் பலரும் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லாமல், நோட்டாவுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளிப்பதை விரும்புகின்றனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், சில ஆயிரம் வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுப்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வருகிறது. காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில், 2019ல், 21,661 பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல, 2024ல், 16,965 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்.

அதேபோல, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், 7,533 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டுக்கு முந்தைய தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரங்களில் நோட்டா என்ற பொத்தான் இல்லை. இதனால், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர், 49ஓ என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி, விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.

இதன் மூலம், வேட்பாளர் யாருக்கும் ஓட்டளிக்காமல் சென்ற வாக்காளர் விபரம், கட்சி ஏஜன்ட்கள் மூலம் வெளியே தெரிந்தது. இதனால், பலரும் இந்த முறையை பின்பற்ற தயக்கம் காட்டினர்.

அடுத்து வந்த தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நோட்டா என்ற பொத்தான் ஏற்படுத்தியதால், எளிதாக நோட்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us