ADDED : செப் 23, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, நல்லுார் சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில், நுால் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வித்வான் மகாதேவன் எழுதிய, 'ராமர் நடந்த பாதையில்' என்னும் ஆய்வு நுாலை வெளியீட்டார்.
இதன் முதல் பிரதியை, சங்கரா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். சென்னை வைஷ்ணவா கல்லுாரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.