/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரிக்கெட் லீக் நுங்கம்பாக்கம் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் நுங்கம்பாக்கம் அணி வெற்றி
ADDED : அக் 22, 2025 11:23 PM

சென்னை: டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், நுங்கம்பாக்கம் எஸ்.சி., அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மேடவாக்கத்தில் நடந்த ஐந்தாவது டிவிஷன் போட்டியில், முதலில் பேட் செய்த நுங்கம்பாக்கம் அணி, 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 122 ரன்கள் அடித்தது.
அடுத்து பேட் செய்த ஐ.சி.ஐ.,-ஆர்.சி., அணி 34.3 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டம் இழந்து தோல்வியடைந்தது. அபாரமாக பந்துவீசிய நுங்கம்பாக்கம் வீரர் ஆர்யன், 19 ரன்களை விட்டுகொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார்.
வேளச்சேரியில் நடந்த மற்றொரு போட்டியில், முதலில் பேட் செய்த பிரசாந்த் சி.சி., அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்தது.
அணி வீரர் சுராஜ் 114 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உட்பட 120 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் ரமேஷ் தங்கராஜ் 88 ரன்கள் அடித்தார்.
இருவரும் சேர்ந்து 175 பந்துகளில் 199 ரன்களை அடித்து, சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.
எதிரணி வீரர் பிரதீஷ் 5 விக்கெட் சாய்த்தார். அடுத்து விளையாடிய கோபாலபுரம் சி.சி., அணி 31.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 206 ரன்கள் வித்தியாசத்தில் பிரசாந்த் சி.சி., அணி வெற்றி பெற்றது.