/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் வலை சேதம்
/
நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் வலை சேதம்
ADDED : ஜூலை 02, 2025 12:35 AM

உத்திரமேரூர்:திருப்புலிவனத்தில் நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் சேதமடைந்து உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 2022 --- 2023 நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் செலவில், நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் அமைக்கப்பட்டது.
இந்த நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடிலில், நிழல் தரக்கூடிய வேம்பு, புங்கன், கொய்யா, அத்தி ஆகிய நாற்றுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதை கிராமத்தில் பிரதான சாலையோரங்கள், பள்ளி, புறம்போக்கு நிலங்கள் ஆகிய இடங்களை மரங்கள் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இங்கு வளர்க்கப்படும் நாற்றுகள் வெயில், மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க, பசுமை குடில் வலை அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது, நாற்றங்கால் முறையாக பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து, பசுமை குடில் வலை கிழிந்து உள்ளது.
எனவே, சேதமடைந்துள்ள நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடிலை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.