/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி
ADDED : அக் 01, 2024 02:45 AM

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், கல்லுாரி மாணவியருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நேற்று நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுகுமாரன், ஒய்வு பெற்ற குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகம், மேற்பார்வையாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் வளர் இளம் பெண்கள் ரத்த சோகையை தவிர்த்தல், குழந்தை வளர்ச்சியை கண்காணித்தல், சரியான நேரத்தில் அளவான இணை உணவுகள் மற்றும் அதை எடுத்துக் கொள்ளும் முறைகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து கல்லுாரி மாணவியருக்கான வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. பின், ஊட்டச்சத்து உணவுகள் குறித்தான உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தான பாரம்பரிய உணவுகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.