ADDED : செப் 01, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர், செப். 2–
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், ஒன்றிய தலைவர் பபிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்திட வேண்டும், சத்துணவு திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், உணவு மானிய செலவினத்தை உயர்த்திட வேண்டும். என, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
