/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயை ஆக்கிரமித்து கடைகளுக்கு படிக்கட்டு
/
வடிகால்வாயை ஆக்கிரமித்து கடைகளுக்கு படிக்கட்டு
ADDED : ஏப் 18, 2025 01:01 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், மலையாள தெரு, அமுதுபடி தெரு, ஆணைகட்டி தெரு உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர், வெளியேறும் வகையில், புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் தெருவில், சாலையோரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆணைகட்டி தெரு, புண்ணியகோட்டீஸ்வரர் சன்னதி தெரு இருமுனை சந்திப்பில், தி.மு.க., பிரமுகர் ஒருவர், புதிதாக வணிக வளாகம் கட்டியுள்ளார். இந்த கட்டடத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் படிக்கட்டுகள் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கால்வாய் மீது படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதால், மழைகாலத்தில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால், அப்பகுதி முழுதும் மழைநீர் வெளியேறாமல் நான்கு முனை சந்திப்பில் குளம்போல தேங்கும் நிலை உள்ளது.
ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், அருகில் வசிப்பவர்களும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்ய வழிவகுக்கும். நாளடைவில் கால்வாய் முழுதும் மாயமாகும் சூழல் உள்ளது.
எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தின் படிக்கட்டுகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

