/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விருட்ச விநாயகருக்கு முக்கனி படையல்
/
விருட்ச விநாயகருக்கு முக்கனி படையல்
ADDED : ஏப் 17, 2025 12:56 AM

கூழமந்தல்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, கூழமந்தல், உக்கம்பெரும்பாக்கம் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், விசுவாவசு தமிழ் புத்தாண்டின், முதல் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.
இதையொட்டி, கணபதி ஹோமம் விசேஷ கலச அபிஷேகம், அலங்காரம், மா, பலா, வாழை போன்ற விநாயகருக்கு உகந்த முக்கனிகள் நைவேத்தியம் செய்யப்பட்டது.
சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு திருக்கச்சியம்பதி விநாயகருக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு, சித்தி, புத்தி காசி விநாயகர் கோவில், காந்தி சாலை, வன்னீஸ்வரர் கோவிலில் உள்ள சித்தி செல்வ விநாயகர், வி.என்.பெருமாள் தெரு விக்னராஜ விநாயகர், வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், திருக்காலிமேடு பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சங்கடஹரசதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடந்தது.