/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
/
குடிநீர் திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
குடிநீர் திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
குடிநீர் திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 18, 2025 01:33 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 'அம்ரூத்' திட்டத்தில், குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள, கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி நேற்று அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், ஐ.ஏ.எஸ்.,அதிகாரியுமான கந்தசாமி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அரசு திட்டங்களை நேற்று பார்வையிட்டார்.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைக்கும் பணியினை பார்வையிட்டு, வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின், வாலாஜாபாத் பேரூராட்சியில், 'அம்ரூத்' திட்டத்தின்கீழ், குடிநீர் விநியோகத் திட்ட பணிகளை பார்வையிட்டு, குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் கூட்டுறவுத் துறையின் வாயிலாக அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார்.
அலுவலர்களிடம் விற்பனை மற்றும் மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை கல்லுாரி விடுதியையும் பார்வையிட்டார்.
பணிகள் முடிந்த பின், கலெக்டர் வளாகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன், கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார். அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அப்போது கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருணாளினி, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக்அலி உட்பட பலர் உடனிருந்தனர்.