/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் சீரமைப்பு சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
/
உத்திரமேரூர் சீரமைப்பு சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
உத்திரமேரூர் சீரமைப்பு சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
உத்திரமேரூர் சீரமைப்பு சாலை தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 21, 2024 11:38 PM

உத்திரமேரூர்:தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உத்திரமேரூர் - செங்கல்பட்டு இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதற்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில், 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறையில் துவங்கி, சாலவாக்கம் கூட்டுச்சாலை, நெல்வாய் கூட்டுச்சாலை, உத்திரமேரூர் வழியாக மானாம்பதி - வந்தவாசி கூட்டுச்சாலை வரை, 32 கி.மீ., துாரத்திற்கு, 16.2 கி.மீ., அகலத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இதில், உத்திரமேரூரில் இருந்து, புக்கத்துறை வரையிலான 7 கி.மீ., துாரம் கொண்ட சாலை விரிவாக்கப் பணி நிறைவு பெற்று தற்போது பயன்பாட்டில் உள்ளது.
மேலும், உத்திரமேரூர் - புக்கத்துறை 7 கி.மீ., சாலையின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டு, வாகன மாசுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 14,000 அரளி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று, அச்சாலையில் அகற்றம் செய்த மரங்களுக்கு மாறாக சீரமைத்த சாலையின் இருபுறமும் 6,000 மரகன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீரமைத்த சாலை பணியின் தரம் மற்றும் சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு போன்றவை குறித்து, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் கோட்ட பொறியாளர் முரளிதரன், உத்திரமேரூர் உதவி கோட்ட பொறியாளர் அனந்த கல்யாணராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.