/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பு சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
/
கரும்பு சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
கரும்பு சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
கரும்பு சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 12, 2025 01:50 AM

சீட்டணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், குருமஞ்சேரி, களியப்பேட்டை, கரும்பாக்கம், காவிதண்டலம், அரும்புலியூர், திருவானைக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம் கரும்புகள், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் உற்பத்தி செய்யும் கரும்புகளாக இருந்து வருகிறது.
இதனிடையே, இப்பகுதிகரும்பு விவசாயிகள் பலர், சில ஆண்டுளாக கரும்புக்கு பதிலாக நெல் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில்ஆண்டுக்கு, ஆண்டு கரும்புசாகுபடி நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்நிலையில், சீட்டணஞ்சேரி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கரும்பு விவசாயிகளை, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் நேரடியாக சந்தித்து, கரும்பு சாகுபடி செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் காமாட்சி மற்றும் கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன், சீட்டணஞ்சேரி கோட்ட கரும்பு அலுவலர் ஹாசன் அப்துல் காதர் உள்ளிட்டோர், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராம கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசினர்.
அப்போது விதைகரும்புகள் உற்பத்திசெய்யப்படும் நிழல்வளை கூடங்கள் மற்றும் கரும்பு நாற்று பண்ணைகளை ஆய்வு செய்தனர்.
அப்பகுதி விவசாயிகள்உற்பத்தி செய்யும் விதை கரும்பு மற்றும் நாற்று ரகங்களை பார்வையிட்டு, கரும்பு சாகுபடி நிலப் பரப்பை அதிகரிக்க அறிவுறுத்தினர். கரும்புபயிரிட தேவையானஉதவிகள் செய்வதாக கூறி ஊக்கமளித்தனர்.