/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை

ADDED : மார் 20, 2025 01:17 AM
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், வல்லம் வடகால் சிப்காட் தொழில் பூங்காவில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள ஒரு நிறுவனத்தில், கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, சிலிண்டர், இன்ஜின், கியர் வீல், டர்பன் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
முறையான ஐ.எஸ்.ஐ., முத்திரை இன்றி, அலுமினிய அலாய் வீல் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்து, சந்தைக்கு அனுப்புவதாக, பி.ஐ.எஸ்., என்ற இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, பி.ஐ.எஸ்., இணை இயக்குநர்கள் அருண் புச்சகாயாலா, ஸ்ரீஜித் மோகன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு, நேற்று முன்தினம், வல்லம் வடகால் சிப்காட் தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.
அதில், அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் தரக் கட்டுப்பாடு உத்தரவை மீறி, ஐ.எஸ்.ஐ., முத்திரையின்றி தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
குற்றம் நிரூபணமானால், நிறுவனங்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது உற்பத்தி பொருட்களின் மதிப்பில், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும் என, பி.ஐ.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர்.