/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் இடத்தை விற்க முயற்சி 'சீல்' வைத்த அதிகாரிகள்
/
கோவில் இடத்தை விற்க முயற்சி 'சீல்' வைத்த அதிகாரிகள்
கோவில் இடத்தை விற்க முயற்சி 'சீல்' வைத்த அதிகாரிகள்
கோவில் இடத்தை விற்க முயற்சி 'சீல்' வைத்த அதிகாரிகள்
ADDED : டிச 03, 2024 09:50 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் உள்ளன. அவ்வாறு, இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளாக வாடகைதாரராக லட்சுமிபாய் என்பவரும், அவரது வாரிசுதாரர்களும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வீடு மற்றும் இடம் விற்பனைக்கு இருப்பதாக, சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. கோவிலுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக, அப்பகுதியில் வசிப்பவர்களும், அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் மற்றும் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். கோவிலுக்கு சொந்தமான இடம், வீட்டை அதில் வசிப்போர், தனி நபருக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இப்புகார் தொடர்பாக, கோவில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், நகர ஆய்வாளர் அலமேலு மற்றும் கோவில் பணியாளர்கள் கொண்ட குழுவினர், சம்பந்தப்பட்ட வீட்டை பூட்டி நேற்று சீல் வைத்தனர்.