/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக மாத்திரையால் முதியவர் உயிரிழப்பு
/
அதிக மாத்திரையால் முதியவர் உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 80. இவர், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி, கை செயல் இழப்பு காரணமாக சாப்பாட்டுக்கு பின் போட வேண்டிய நான்கு மாத்திரைக்கு பதில் ஏழு மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆபத்தான நிலையில், காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.