ADDED : ஜன 27, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த, வாயலுார் பெரிய காலனியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் தம்பிதுரை, 60; பரோட்டா மாஸ்டர்.
கடந்த ஜன., 25ம் தேதி பணிக்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டார். பின், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு, வாயலுார் சேரியம்மன் கோவில் குளத்தில், முதியவர் ஒருவரின் உடல் மிதப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்தது தம்பிதுரை என தெரியவந்தது.