ADDED : பிப் 16, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:சென்னை, சித்துக்காடு பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பல்லவராஜ், 44, என்பவர், 'மகிந்திரா ஸ்கார்பியோ' காரில், நேற்று சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்த பட்டாபி, 60, என்பவர், அச்சிறுபாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்திற்கு செல்வதற்காக, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
இதில், முதியவர் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சிறுபாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.