/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மூதாட்டி அலைக்கழிப்பு
/
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மூதாட்டி அலைக்கழிப்பு
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மூதாட்டி அலைக்கழிப்பு
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் மூதாட்டி அலைக்கழிப்பு
ADDED : ஜன 03, 2025 07:48 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தம், 75. இவரது கணவர் மூர்த்தி, 2022ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 10 மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால், மூதாட்டி பொருட்கள் வாங்க, ரேஷன் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதையடுத்து, டிச., மாதம் ரேஷன் கடைக்கு சென்ற போது, மூதாட்டியின் பெயர் கார்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக, ரேஷன் கடை ஊழியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது, 'நீங்கள் காஞ்சிபுரம் தான் சென்று பார்க்க வேண்டும்' எனக் கூறி அலைக்கழித்துள்ளனர்.
உடல்நிலை சரியில்லாம், ரேஷன் பொருட்கள் வாங்க செல்லாமல் வீட்டில் இருந்த மூதாட்டியை, அதிகாரிகளின் அலட்சியத்தால், உயிருடன் இருக்கும் போதே எவ்வித விசாரணையும் செய்யாமல், ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

