/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் வரும் 10ல் தொழிற்பழகுனர் மேளா
/
ஒரகடத்தில் வரும் 10ல் தொழிற்பழகுனர் மேளா
ADDED : ஜன 06, 2024 11:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, நிரல் மேலாளர், தரவு உதவியாளர், பல்நோக்கு பணியாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை, https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சான்றிதழ்களுடன் வரும் 18க்குள், ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தின், நிர்வாக செயலர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
●புதிய தொழிற்பள்ளிகள் துவக்குதல், தொழிற்பள்ளிகளில் புதிய பிரிவுகள் துவக்குதல் போன்றவைக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், பிப்., 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
●ஒரகடத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா, வரும் 10ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில், தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை படித்த அல்லது இடைநின்ற மாணவர்களுக்கும் தொழிற் பழகுனர் பயிற்சியில் சேரலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.