/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமராவதிபட்டினம் கல் குவாரியில் பொக்லைன் மோதி ஒருவர் பலி
/
அமராவதிபட்டினம் கல் குவாரியில் பொக்லைன் மோதி ஒருவர் பலி
அமராவதிபட்டினம் கல் குவாரியில் பொக்லைன் மோதி ஒருவர் பலி
அமராவதிபட்டினம் கல் குவாரியில் பொக்லைன் மோதி ஒருவர் பலி
ADDED : ஜூலை 10, 2025 12:38 AM
உத்திரமேரூர்:-அமராவதிபட்டினம் தனியார் கல்குவாரியில் நடந்த சென்றவர், பொக்லைன் வாகனம் மோதி உயிரிழந்தார்.
உத்திரமேரூர் தாலுகா, அமராவதிபட்டினம் கிராமத்தில், தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 55, என்பவர், சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, அவர் வழக்கம்போல கல் குவாரிக்கு வேலைக்கு சென்றார். அப்போது, கல்குவாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் வாகனம், நடந்து சென்ற அவர் மீது மோதியது.
இதில், காயமடைந்த ரவிச்சந்திரனை, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறினார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.