/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1.20 லட்சம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது
/
ரூ.1.20 லட்சம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது
ADDED : மார் 15, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:வாலாஜாபாத் நகரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று மதுவிலக்கு மற்றும் வாலாஜாபாத் போலீசார் அப்பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடைகளில் மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதன் தற்போதைய மதிப்பு 1.20 லட்சம் ரூபாய். இதையடுத்து, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த உபயதுல்லா, 35, என்பவரை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர்.

