/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
162 எம்.சாண்ட் நிறுவனங்களில் 28 மட்டுமே அனுமதி பெற்றது மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கலெக்டரிடம் புகார்

ADDED : நவ 25, 2025 04:13 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 162 எம்.சாண்ட் நிறுவனங்களில், 28 மட்டுமே கனிமவளத்துறை அனுமதி பெற்றிருப்பதாக, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இதில், பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 382 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தரமற்ற எம்.சாண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் அளித்த மனு விபரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 162 எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படும் நிலையில், அதில், 28 மட்டுமே கனிமவளத்துறை அனுமதி பெற்று இயங்குகின்றன.
மீதமுள்ள நிறுவனங்கள் முறையான அரசு அனுமதியின்றி இயங்குவதை நிறுத்த நாங்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால், தரமற்ற கட்டடங்கள், அரசு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கனிமவளத்துறை இயக்குநரை சந்தித்தால், கலெக்டர்களுக்கே முழு அதிகாரம் இருப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது.
சட்டவிரோத எம்.சாண்ட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்துவதோடு, சட்ட போராட்டங்களையும் நடத்துவோம்.
அரசு அனுமதியின்றி செயல்படும் எம்.சாண்ட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.