/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு
/
குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : மே 11, 2025 12:40 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், அருந்ததிபாளையம், மேல் சித்தமல்லி, நாகமேடு, கொருக்கந்தாங்கல் உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய்கள் ஆகியவற்றின் வாயிலாக, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 9 கி.மீ., தூரத்தில் குழாய் வாயிலாகவும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரும்போது அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் தடைப்பட்டு வந்தது.
இதை தவிர்க்க, குடிநீர் நீர்த்தேக்க கிணறு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 1 கோடி செலவில், குடிநீர் நீர்த்தேக்க கிணறு, மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் ஆகியவை அமைக்கப்பட்டது.
இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மருத்துவன்பாடி ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று குடிநீர் நீர்த்தேக்க கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.