ADDED : பிப் 12, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி குறுவட்டத்தில், புதிய கட்டடங்களின் கட்டுமான பணிகள் துவக்கம் மற்றும் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காஞ்சிபுரம் அடுத்த காரை உயர்நிலைப் பள்ளி கட்டடம் மற்றும் மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
கம்மவார்பாளையம் கிராமத்தில், கூடுதல் வகுப்பறை கட்டடம், புள்ளலுார் கிராமத்தில் மின்மாற்றி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.