/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை பரமபதவாசல் திறப்பு
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை பரமபதவாசல் திறப்பு
வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை பரமபதவாசல் திறப்பு
வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை பரமபதவாசல் திறப்பு
ADDED : ஜன 08, 2025 07:30 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில், பாலாறு, வேகவதி ஆறு, செய்யாறு ஆகிய மூன்றும் ஒன்றாக சேறும் இடத்தில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு, பெருமாள், விஷ்ணுவை போல கையில் சக்கரமும், சிவனை போல தலையில் ஜடாமுடியுடன் நெற்றிக்கண்ணும், பிரம்மாவை போல திருவடியில் தாமரை மலர்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நாளை காலை வைகுண்ட ஏகதாசி உற்சவம் நடக்க உள்ளது.
அதிகாலை 3:00 மணிக்கு, கோ பூஜை மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு பரமபதவாசல் கடந்து காலை 9:00 மணிவரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.