/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 2 மாதத்தில் ரூ.8.69 லட்சம் வசூல்
/
அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 2 மாதத்தில் ரூ.8.69 லட்சம் வசூல்
அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 2 மாதத்தில் ரூ.8.69 லட்சம் வசூல்
அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 2 மாதத்தில் ரூ.8.69 லட்சம் வசூல்
ADDED : ஏப் 02, 2025 08:50 PM
குன்றத்துார்:குன்றத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விதிமுறையை மீறி, அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி- - வாலாஜா சாலை, பூந்தமல்லி- - செங்கல்பட்டு சாலைகளில், நாள்தோறும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில், விதிமுறையை மீறி, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மடக்கி, சோதனை செய்யப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி சென்ற கனரக வாகனங்களுக்கு, 8.69 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடரும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.