/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் நெல் உலர்த்துவதால் புலிப்பாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு
/
சாலையில் நெல் உலர்த்துவதால் புலிப்பாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையில் நெல் உலர்த்துவதால் புலிப்பாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு
சாலையில் நெல் உலர்த்துவதால் புலிப்பாக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : ஜூலை 07, 2025 11:56 PM

உத்திரமேரூர்,புலிப்பாக்கத்தில், நெற்களம் இருந்தும் சாலையிலேயே நெல்லை கொட்டி உலர்த்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், புலிப்பாக்கம் கிராமத்தில், சாலவாக்கம் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், புலிப்பாக்கம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு, நவரை பருவ நெல் அறுவடை இரண்டு மாதத்திற்கு முன் முடிந்தது. அதில், பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துவிட்டனர்.
சில விவசாயிகள் நெல்லை விற்காமல் விதைக்காக வீட்டில் சேமித்து வைத்துள்ளனர். தற்போது, விவசாயிகள் அந்த நெல்லை அங்குள்ள நெற்களத்தில் கொட்டி உலர்த்தாமல், சாலவாக்கம் செல்லும் சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
இதனால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து, விவசாயிகள் சாலவாக்கம் சாலையில் நெல்லை கொட்டி உலர்த்துவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, சாலையில் நெல்லை கொட்டி உலர்த்துவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலவாக்கம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக அடிக்கடி நெல் கொட்டப்பட்டு வருகிறது.
'இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இனி, சாலையில் நெல்லை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்' என்றார்.