/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தாநல்லுார், மதுராநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
/
நத்தாநல்லுார், மதுராநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
நத்தாநல்லுார், மதுராநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
நத்தாநல்லுார், மதுராநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
ADDED : மார் 31, 2025 01:24 AM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுாரில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர். கடந்த மாதம், டிசம்பரில், சம்பா பட்டத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து விற்பனை செய்ய காத்திருந்தனர்.
இதேபோன்று, மதுராநல்லுார் பகுதியிலும், நெல் கொள்முதல் நிலையம் விரைவாக துவக்க அப்பகுதியில் விவசாயிகள் கோரி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நத்தாநல்லுார் மற்றும் மதுராநல்லுார் ஆகிய கிராமங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.
வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.