ADDED : மார் 31, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: மேல்கதிர்பூர் கிராமத்தில் விவசாயிகளின் பங்களிப்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கை விவசாயிகள் நேற்று திறந்து வைத்தனர்.
மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை செய்யும் நெல்லை, மழையில் நனையாமல், பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில், விவசாயிகளின் பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய் செலவில், 5,000 நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், நெல் சேமிப்பு கிடங்கு புதிதாக கட்டப்பட்டது.
இதில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா வசதியுடன் புதிதாக கட்டப்பட்ட, நெல் சேமிப்பு கிடங்கை விவசாயிகள் நேற்று திறந்து வைத்தனர். முன்னதாக, மேல்கதிர்பூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் திறந்து வைத்தனர்.
