ADDED : மே 14, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி, 60; பெயின்டர்.
இவர், குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில், புதிதாக கட்டிய வீட்டிற்கு சக பணியாளர்களுடன் சேர்ந்து, நேற்று பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த ரவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ரவி இறந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
