/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த பழந்தண்டலம் சாலை
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த பழந்தண்டலம் சாலை
ADDED : ஜன 17, 2024 10:14 PM

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், பழந்தண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், வழுதலம்பேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சைக்கிள்களில் செல்கின்றனர்.
பழந்தண்டலத்தில் இருந்து தாம்பரத்திற்கு 55பி., தடம் எண்ணில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், பழந்தண்டலம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருமுடிவாக்கம் செல்லும் 1 கி.மீ., துாரம் கொண்ட சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.
மேலும், ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், அந்த வழியே செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
பழந்தண்டலம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.