/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் விளக்கு இல்லாத பாலாறு பாலங்கள்
/
மின் விளக்கு இல்லாத பாலாறு பாலங்கள்
ADDED : செப் 03, 2025 02:03 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள இரு உயர்மட்ட பாலங்களில் இதுவரை மின்விளக்கு வசதி இல்லாதது, விபத்துக்கு வழிவகுப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் பாலாற்றின் குறுக்கே, 1997- - 98ம் ஆண்டுகளில், ஓரிக்கை மற்றும் செவிலிமேடு ஆகிய இடங்களில் இரு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டன.
இரண்டு பாலங்களும் இப்போது வரை பயன்பாட்டில் உள்ள நிலையில், இரு பாலங்களுக்கும் இதுவரை மின் விளக்கு வசதி கிடையாது.
ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு பாலங்களும், 10 மீட்டர் அகலம் கொண்டது.
அன்றாடம், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், மின் விளக்கு வசதி தற்போது வரை இல்லை.
முன்பு ஊராட்சி பகுதிகளாக இருந்த இந்த இடங்கள் இப்போது மாநகராட்சி எல்லையில் உள்ளன.
இரவில் செல்லும் வாகனங்கள் மின் விளக்கு இல்லாததால் விபத்து ஏற்பட்டு விழுந்து காயம்அடைகின்றன.
இரு பாலங்களிலும் ஏராளமான விபத்துகள் இரவில் நடந்துள்ளன. மிக முக்கியமான ஓரிக்கை, செவிலிமேடு பாலாறு பாலங்களில் இதுவரை மின் விளக்கு பொருத்தப் படாமல் இருப்பது மேலும் பல விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இரு பாலங்களிலும் மின் விளக்கு வசதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.