/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு குடிநீர் திட்டம் ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்
/
பாலாறு குடிநீர் திட்டம் ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்
பாலாறு குடிநீர் திட்டம் ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்
பாலாறு குடிநீர் திட்டம் ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 12:53 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை வசந்தம் நகரினர், பாலாறு குடிநீரும், பாதாள சாக்கடை திட்டமும் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை வசந்தம் நகரில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர் களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாலாற்று குடிநீர் குழாய் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், இங்கு வசிப்போர் மினி டேங்க் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதேபோல, வீட்டு உபயோகம் மற்றும் கழிப்பறை கழிவுநீர் வெளியேறும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கழிப்பறை நீரை வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைத்தும், வீடு கட்டியுள்ள மனையில் காலியாக உள்ள இடத்தில், தோட்டம் அமைத்து வீட்டு உபயோக கழிவுநீரை செடிகளுக்கு பயன்படுத்தியும் வருகின்றனர்.
இடவசதி இல்லாதவர்கள், வீட்டு உபயோக கழிவுநீரை, மழைநீர் வடிகால்வாயில் விட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஓரிக்கை வசந்தம் நகரில் உள்ள வீடுகளுக்கு பாலாற்று குடிநீர் வழங்கவும், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.