/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று கால்வாய் துார்வாரி சீரமைப்பு
/
பாலாற்று கால்வாய் துார்வாரி சீரமைப்பு
ADDED : அக் 03, 2025 01:19 AM

வாலாஜாபாத், அவளூர் ஏரிக்கான பாலாற்று கால்வாயை துார்வாரி சீரமைக்கும் பணியை, நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது.
வாலாஜாபாத் அடுத்த அவளூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி, 300 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகிறது.
பெரியநத்தம் பாலாற்றில் இருந்து அவளூர் ஏரிக்கு, 4 கி.மீ., துாரத்திலான நீர்வரத்து கால்வாய் உள்ளது. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில், இக்கால்வாய் மூலம் சென்றடையும் தண்ணீர், அவளூர் மற்றும் தம்மனுார், நெய்க்குப்பம் ஆகிய ஏரிகள் நிரம்ப முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
சில ஆண்டுகளாக, அவளூர் ஏரிக்கான பாலாற்று கால்வாய் முறையான பராமரிப்பில்லாததால் துார்ந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், மழைக்காலங்களில் பாலாற்று தண்ணீர், அவளூர் ஏரிக்கு வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், அவளூர் ஏரிக்கான பாலாற்று கால்வாயை, பருவ மழைக்கு முன்னதாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் சமீபத்தில் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
கலெக்டர் உத்தரவையடுத்து, காஞ்சிபுரம் நீர்வளத் துறை சார்பில், அவளூர் ஏரி பாலாற்று நீர்வரத்துக் கால்வாய் துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.