/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடு வி.ஏ.ஒ., மீது ஊராட்சி தலைவி புகார்
/
ஊத்துக்காடு வி.ஏ.ஒ., மீது ஊராட்சி தலைவி புகார்
ADDED : ஜன 08, 2025 07:35 PM
வாலாஜாபாத்:ஊத்துக்காடு ஊராட்சி தலைவராக சாவித்திரி என்பவர் பதவி வகிக்கிறார். இவர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் அப்பகுதி வி.ஏ.ஓ., குறித்து புகார் அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊத்துக்காடு பகுதியில், கிராம நிர்வாக அலுவலராக புருஷோத்தம்மன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரது முறைகேடு மற்றும் செயல்பாடு குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கடந்த 6ம் தேதி, மனு அளித்திருந்தேன்.
அதுகுறித்து அறிந்த வி.ஏ.ஒ., புருஷோத்தம்மன், அவரது மொபைல் போன் வாட்ஸ்ஸாப் மற்றும் முகநுாலில் என் மீதும், என் கணவர் மணிகண்டன் குறித்தும் அவதுாறு பரப்பும் வகையில் தகவல் பகிர்ந்து வருகிறார்.
கலெக்டரிடம் மனு அளிப்பது தவறா? அரசு அதிகாரியாக இருந்துக்கொண்டு ஊராட்சி தலைவரான என்னையும், என் கணவரையும் இழிவுப் படுத்தி வருகிறார்.
இதுகுறித்து, புகார் மனு அளித்தாலும், அவர் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் பொறுப்பு வகிப்பதால் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.