/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாண்டவ துாத பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
பாண்டவ துாத பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
பாண்டவ துாத பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
பாண்டவ துாத பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : பிப் 15, 2024 09:39 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பாண்டவ துாத பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் இதற்கு முன், 1989ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 35 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி கடந்த 12ல் மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 8:15 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மூலவருக்கும்பரிவாரமூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனமும், மஹா தீபாராதனையும் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.