/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஏரி கலங்கலில் ஆபத்தை உணராமல் கைக்குழந்தையுடன் இறங்கி பெற்றோர் வேடிக்கை

ADDED : அக் 26, 2025 11:06 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரி கலங்கலில், ஆபத்தை உணராமல் கைக்குழந்தையுடன், இறங்கி வேடிக்கை பார்ப்போரை, நீர்வளத் துறையினர் தடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள உத்திரமேரூர் ஏரி 20 அடி ஆழமும், 1.1 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இங்கு, 18 மதகுகளும், மூன்று கலங்கல்களும் உள்ளன.
பருவமழை நேரங்களில் இந்த ஏரி முழுதுமாக நிரம்பும்போது, 18 கிராமங்களைச் சேர்ந்த, 5,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக, செய்யாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கு முன் முழு கொள்ளளவை எட்டியது.
அதை தொடர்ந்து, மூன்று கலங்கல்கள் வழியே உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, மக்கள் குடும்பத்தோடு, ஏரியை வேடிக்கை பார்க்க தினமும் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருபவர்களில் சிலர், ஆபத்தை உணராமல் கைக்குழந்தையுடன் கலங்கலில் இறங்கி வேடிக்கை பார்க்கின்றனர். எதிர்பாராதவிதமாக குழந்தை கைநழுவி ஏரி தண்ணீரில் விழ வாய்ப்புள்ளது.
எனவே, உத்திரமேரூர் ஏரி கலங்கலில் கைக் குழந்தையுடன், இறங்கி வேடிக்கை பார்ப்போரை தடுக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.