/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தல்
/
சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தல்
சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தல்
சேதமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2025 01:49 AM
உத்திரமேரூர்: மானாம்பதியில், சேதம் அடைந்துள்ள பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 800 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டட கூரை மற்றும் தாழ்வாரத்தில் கான்கிரீட் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மழை நேரங்களில் கூரையில் இருந்து தண்ணீர் வழிந்து, வகுப்பறை முழுதும் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. சேதமடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

