/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழங்குடியினர் குடியிருப்பை பார்லி., நிலைக்குழு ஆய்வு
/
பழங்குடியினர் குடியிருப்பை பார்லி., நிலைக்குழு ஆய்வு
பழங்குடியினர் குடியிருப்பை பார்லி., நிலைக்குழு ஆய்வு
பழங்குடியினர் குடியிருப்பை பார்லி., நிலைக்குழு ஆய்வு
ADDED : ஜன 18, 2025 01:34 AM

ஸ்ரீபெரும்புதுார்,:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் ஊராக வளர்ச்சி துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை, பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
எழிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர் கிராமத்தில் வசித்துவரும் பயங்குடியினர் மக்களுக்கு, தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 வீடுகளை பார்லி., நிலைக்குழு தலைவரும் ஒடிசா கோராபுட் காங்., எம்.பி., சப்தகிரி சங்கர் உலகா தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, பயங்குடியனர் மக்களை சந்தித்து அவர்களின் வாழ்கை முறை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து, மாவட்ட மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில், சுயஉதவிக்குழு பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டனர்.
இதில், பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள் பஜன் லால் ஜாதவ், நபா சரண் மாஜி, ஜனார்த்தன் மிஸ்ரா, கீதா என்கிற சந்திரபிரபா, வைகோ, சண்டிபன்ராவ் பும்ரே, சஞ்சய் ஜெஸ்வால், ஜுகால் கிஷோர், இம்ரான் மசூத், ஸ்ரீதேவேந்திரசிங், ஊரக வளர்ச்சி துறை அரசு தலைமை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பொன்னையா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.