/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மைதானத்தில் பார்த்தீனியம் செடிகள் மாணவர்கள் விளையாடுவதில் சிக்கல்
/
பள்ளி மைதானத்தில் பார்த்தீனியம் செடிகள் மாணவர்கள் விளையாடுவதில் சிக்கல்
பள்ளி மைதானத்தில் பார்த்தீனியம் செடிகள் மாணவர்கள் விளையாடுவதில் சிக்கல்
பள்ளி மைதானத்தில் பார்த்தீனியம் செடிகள் மாணவர்கள் விளையாடுவதில் சிக்கல்
ADDED : செப் 08, 2025 12:56 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டாக்டர் பட்டுகோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் சேக்குபேட்டை, வைகுண்டபுரம் தெருவில் உள்ள டாக்டர் பட்டுகோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு என விளையாட்டு மைதானம் உள்ளது. இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாததால், மைதானத்தி ல் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், இப்பள்ளி மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில், டாக்டர் பட்டுகோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு மைதானம் இருந்தும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், மாணவர்கள் விளையாட்டு பாட நேரத்தில் விளையாட முடியாத பரிதாப நிலை உள்ளது.
எனவே, மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் டாக்டர் பட்டுகோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.