/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரைகுறை மழைநீர் வடிகால் பணியால் லேசான மழைக்கே வல்லம் கண்டிகையில் பாதிப்பு
/
அரைகுறை மழைநீர் வடிகால் பணியால் லேசான மழைக்கே வல்லம் கண்டிகையில் பாதிப்பு
அரைகுறை மழைநீர் வடிகால் பணியால் லேசான மழைக்கே வல்லம் கண்டிகையில் பாதிப்பு
அரைகுறை மழைநீர் வடிகால் பணியால் லேசான மழைக்கே வல்லம் கண்டிகையில் பாதிப்பு
ADDED : அக் 09, 2025 02:58 AM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லம்- வடகால் சிப்காட் சாலையில் இருந்து, வல்லம் கண்டிகை செல்லும் சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் பணி அரைகுறையாக உள்ளதால், அப்பகுதியில் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வல்லம் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும், வல்லம் வடகால் சிப்காட் சாலை வழியே சுற்றுவட்டார மக்கள் சென்று வருகின்றனர்.
வல்லம் வடகால் சிப்காட் சாலையில், வல்லம் கண்டிகை உட்புற சாலை சந்திக்கும் இடத்தில், வடிகால் கட்டுமான பணிகள் அரைகுறையாக உள்ளன.
இதனால், நேற்று மதியம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பெய்த லேசான மழைக்கே, மழைநீர் சாலையில் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்தது.
வல்லம்- கண்டிகைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் வாகனத்தை இயக்கமுடியாமல், தண்ணீரில் இறங்கி வாகனத்தை தள்ளி கொண்டு சென்றனர்.
முறையான வடிகால் வசதி இல்லாததால், ஒவ்வொரு மழையின் போதும், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
என வே, அப்பகுதியில் மழைநீர் சீராக வடிய, வடிகால் வசதி அமைக்க, சிப்காட் நிர்வாகம் மற்றும், உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.