ADDED : மார் 14, 2024 11:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நவீன பயணியர் நிழற்குடை அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா, முதலுதவிபெட்டி, கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கை வசதி, மின்விசிறி, மொபைல் போன் சார்ஜ் செய்ய பிளக் பாய்ன்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட நவீன பயணியர் நிழற்குடையை காஞ்சிபுரம் தி.மு.க, - எம்.பி., செல்வம் திறந்து வைத்தார்.
விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் - காஞ்சிபுரம் எழிலரசன், உத்திரமேரூர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

