/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாமல் பயணியர் புலம்பல்
/
கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாமல் பயணியர் புலம்பல்
கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாமல் பயணியர் புலம்பல்
கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாமல் பயணியர் புலம்பல்
ADDED : செப் 25, 2024 03:50 AM

சென்னை விமான நிலையத்தில் உணவு மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பயணியர் தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், விமான நிலையத்தில் உள்ள லவுஞ்ச் பகுதியில், குறிப்பிட்ட சில வங்கிகளின் சர்வதேச கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என, சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அதேபோல, சர்வதேச விமான நிலையத்தில் பணம் செலுத்துவதற்கான வசதிகளிலும், குறைபாடுகள் இருப்பதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணியர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கேட்ட போது, 'லவுஞ்ச் பகுதியில் உள்ள சேவைகளை, தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. சில வங்கிகளின் இணையதள சேவையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இது போன்று நடந்துள்ளது. தற்போது, வழக்கம் போல் அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது' என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.