நிழற்குடை, மின்விளக்கு வசதி ஏற்படுத்த பயணியர் கோரிக்கை
நிழற்குடை, மின்விளக்கு வசதி ஏற்படுத்த பயணியர் கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 05:02 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அடுத்த கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை மற்றும் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரம் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், பயணியர் அச்சத்தில் கத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் -– வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை வட்டம்பாக்கம், பனப்பாக்கம், எறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ – - மாணவியர், பொதுமக்கள் பயன்படுத்தி, படப்பை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை மற்றும் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், பயணியர் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல், இரவு நேரத்தில் காத்திருக்கும் பெண் பயணியர், இருளில் அச்சத்துடன் பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, பெண் பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
