/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தங்களில் நிறுத்தாத அரசு பஸ்களால் பயணியர் அவதி
/
நிறுத்தங்களில் நிறுத்தாத அரசு பஸ்களால் பயணியர் அவதி
நிறுத்தங்களில் நிறுத்தாத அரசு பஸ்களால் பயணியர் அவதி
நிறுத்தங்களில் நிறுத்தாத அரசு பஸ்களால் பயணியர் அவதி
ADDED : டிச 31, 2024 01:26 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு, தடம் எண்: '212 எச், பி' உள்ளிட்ட பல்வேறு அரசு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. காஞ்சிபுரம், வெள்ளைகேட், தக்கோலம் கூட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இதில், கம்மவார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்பதில்லை. ஆனால், பள்ளூர் நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. அதேபோல், தக்கோலம் கூட்டு சாலை நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்பதில்லை.
தக்கோலம் ரயில் நிலைய நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இதனால், பயணியர் நீண்ட துாரம் இறங்கி நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.