/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் நிலைய சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் பயணியர்
/
பஸ் நிலைய சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் பயணியர்
பஸ் நிலைய சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் பயணியர்
பஸ் நிலைய சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் பயணியர்
ADDED : ஆக 11, 2025 12:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், சமீபத்தில் பெய்த மழையால், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில், பயணியர் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, அரசு பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலகம் மற்றும் சென்னை கோயம்பேடு, தாம்பரம் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தின் அருகில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியரும், பேருந்தில் இருந்து இறங்கும் பயணியரும் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.