/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடிகாரங்கள் இல்லாத மணிக்கூண்டு சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
/
கடிகாரங்கள் இல்லாத மணிக்கூண்டு சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
கடிகாரங்கள் இல்லாத மணிக்கூண்டு சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
கடிகாரங்கள் இல்லாத மணிக்கூண்டு சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 01:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 1998ம் ஆண்டு நான்கு கடிகாரங்களுடன் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. பயன்பாட்டில் இருந்த மணிக்கூண்டு ஒரு சில ஆண்டுகளில் பழுதடைந்தது.
எனவே, பழுதடைந்த கடிகாரத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2023ம் ஆண்டு மார்ச் மாதம் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், கடிகாரம் பழுது நீக்கப்பட்டு, மூன்று கடிகாரத்துடன் பயன்பாட்டிற்கு வந்தது.
பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திலேயே மணிக்கூண்டில் உள்ள மூன்று கடிகாரங்களும், திசைக்கு ஒரு நேரத்தை காட்டியது. இதையடுத்து, மணிக்கூண்டில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கடிகாரங்களும் பழுது நீக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.
அவை மீண்டும் மணிக்கூண்டில் பொருத்தப்படவில்லை. இதனால், பயணியர் நேரத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளதோடு, மணிக்கூண்டும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது
எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நான்கு திசைகளிலும் நேரத்தை காட்டும் வகையில், புதிதாக கடிகாரம் அமைத்து மணிக்கூண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.