/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை இல்லாததால் பேருந்துக்கு வெயில், மழையில் காத்திருக்கும் பயணியர்

ADDED : ஆக 25, 2025 11:25 PM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பேருந்திற்காக மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், பண்ருட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியினர் தங்களின் அடிப்படை தேவை மற்றும் பணி நிமித்தமாக, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் உள்ள பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில், நெடுஞ்சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.