/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!: காஞ்சியில் 6 ஆண்டுகளில் 1.59 லட்சம் பேர் பயன்
/
தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!: காஞ்சியில் 6 ஆண்டுகளில் 1.59 லட்சம் பேர் பயன்
தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!: காஞ்சியில் 6 ஆண்டுகளில் 1.59 லட்சம் பேர் பயன்
தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!: காஞ்சியில் 6 ஆண்டுகளில் 1.59 லட்சம் பேர் பயன்
UPDATED : செப் 06, 2024 01:23 PM
ADDED : செப் 04, 2024 11:18 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோட்ட தபால் நிலையத்தில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், 1.59 லட்சம் பேர், பிற் மாவட்டங்களுக்கு செல்லாமல், தங்கள் மாவட்டங்களிலேயே பயனடைந்துள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர், இதன் வாயிலாக, அலைச்சல் மற்றும் பயண நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின்கீழ், தலைமை தபால் நிலையங்களில், செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர்கள் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இதுதவிர, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என, அழைக்கப்படும் அஞ்சல் வங்கி கணக்கு, சோலாரில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இதில், பாஸ்போர்ட் எடுக்கும் பணி மற்றும் புதுப்பிக்கும் பணியை, தாம்பரம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சென்னையில் இரண்டு இடங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த, 2019ம் தேதி ஜனவரி மாதம் பாஸ்போர்ட் எடுக்கும் பணிகளை, அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், கடந்த மாதம் வரையில் காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர், பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் எனில், தாம்பரம், சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால், பயண நேரம் மற்றும் அலைச்சல் அதிகரித்து வந்தது.
தற்போது, காஞ்சிபுரம் தலைமை தபால் நிலையத்திலேயே, மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் கோட்ட தபால் நிலையத்தில், துவக்க ஆண்டில், 8,727 பேர் மட்டுமே விண்ணப்பித்து வந்தனர். அடுத்த ஆண்டில், 12,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க துவக்கினர். அடுத்த அடுத்தடுத்த ஆண்டுகளில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.
இதனால், சென்னை மற்றும் தாம்பரத்திற்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் அலைச்சல் மிச்சமாவதாக புதிதாக பாஸ்போர்ட் எடுப்போர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:
பாஸ்போர்ட் புதிதாக எடுக்கவும், புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும், சென்னை, தாம்பரத்திற்கு சென்று வந்தனர். காஞ்சிபுரம் கோட்ட தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை துவக்கப்பட்டதன் வாயிலாக, விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆறு ஆண்டுகளில், 1.59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.