மழையால் சேதமான சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' பணிகள் துவக்கம்
மழையால் சேதமான சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' பணிகள் துவக்கம்
ADDED : ஜன 08, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மழையால் சேதமான சாலைகளில், நெடுஞ்சாலைத் துறையினர், 'பேட்ச் ஒர்க்' பணிகளை நேற்று துவக்கினர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக சென்று வருகின்றன.
இச்சாலையில், கடந்த மாதம் பெய்த வடகிழக்கு மழையின்போது, ஆங்காங்கே மண் அரிப்பால் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், வள்ளல் பச்சையப்பன் தெருவில் சேதமடைந்த பகுதிகளில், ரெடிமேட் தார் கலவை மூலம், 'பேட்ச் ஒர்க்' என்ற தற்காலிக சீரமைப்பு பணிகளை நேற்று மேற்கொண்டனர்.
மேலும், சேதமடைந்த சாலைகளிலும் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
