/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பவித் சிங் நாயர் 'டி - 20' 26 அணிகள் பலப்பரீட்சை
/
பவித் சிங் நாயர் 'டி - 20' 26 அணிகள் பலப்பரீட்சை
ADDED : மார் 19, 2024 09:24 PM

சென்னை:குருநானக் கல்லுாரியில் துவங்கியுள்ள டி - 20 கிரிக்கெட் போட்டியை, ஐ.பி.எல்., சென்னை அணியின் 'பேட்டிங்' பயிற்சியாளரான மைக்கேல் ஹசி துவங்கி வைத்தார்.
வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில், 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டி சென்னையில் பல்வேறு மைதானத்தில் நடக்கின்றன.
இதில், லயோலா, ஏ.எம்., ஜெயின், கொங்கு கலை கல்லுாரி உட்பட நாடு முழுதும் இருந்து, ஆண்களில் 16 கல்லுாரி அணிகளும், பெண்களில் 10 அணிகளும் என, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் துவங்கிய முதல் நாள் போட்டியை, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்., சென்னை அணியின் 'பேட்டிங்' பயிற்சியாளரான மைக்கேல் ஹசி, வீரர்களுடன் கைக்குலுக்கி துவங்கி வைத்தார்.
முதல் போட்டியில், குருநானக் 'ஏ' மற்றும் கோவை கோபி கல்லுாரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குருநானக் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து, 182 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, கோபி கல்லுாரி அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழந்து, 125 ரன்களை அடித்தது. இதனால், 57 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து பல்வேறு மைதானத்தில், 23ம் தேதி வரை நடக்கின்றன.
குருநானக் கல்லுாரியில் துவங்கியுள்ள 'டி - 20' கிரிக்கெட் போட்டியை, ஐ.பி.எல்., சென்னை அணியின் 'பேட்டிங்' பயிற்சியாளரான மைக்கேல் ஹசி டாஸ் போட்டு துவங்கி வைத்தார். இடம்: வேளச்சேரி.

